Friday, March 20, 2009

சுனாமி


கடலில் அலை உண்டு - என
பார்த்தோம் கரையில் நின்று
கடலில் அலை வரும் கரை அடையா - என
படித்தேன் பாடத்திலன்று
கடல் அன்னை அள்ளித் தருவாள் - என
சொன்னார் முன்னோர் அன்று.
ஆனால்...! நடந்தத என்ன...!
கரையேது தரையேது என அறியாது - கடல்
தரை வந்ததன் மாயம் என்ன?
இது மாயம் இல்லை - எம்
இயற்கை அன்னையின் சாபம்
.

தற்செயலானது...

காதல் வருவதும்
தற்செயலானது - அக்காதல்
தோல்வியடைவதும்
தற்செயலானது - அதனால்
தற்கொலை செய்வதும்
தற்செயலானது
மொத்தத்தில் எல்லாமே
தற்செயலானது.

நட்பை மறந்த நண்பன்…

வெள்ளியுடன் வந்த - என்
வெளிநாட்டு நண்பா....!
சல்லி இல்லை என்று நீ - என்னை சந்தியில்
சந்தி சிரிக்க வைப்பது தான் நட்பா!!!

அன்று இருந்ததைப் போல் இருப்பாய் - என நான்
அன்புடன் தேடி வந்தேன்...!
ஆனால் நீ - நான்
ஆர்? என்று தெரியாது போல் நடிக்கிறியே...?

வெள்ளைக்காரியை மணம் முடித்தால் - நீ
வெள்ளைக் காரனும் அல்ல
வெளிநாட்டில் இருந்ததால் - நீ
வெளிநாட்டுக் காரனும் அல்ல...!

உன்னைப் பற்றிக் கூறுவதற்கு - என்
உள் மனம் குமுறுகிறது.
என்ன செய்வது - உன் செயலை
என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
காரணம்-
உன் மீது நான் கொண்ட நட்பு…

உங்கள் மூக்கை நீங்களே கடிக்க முடியுமா???

நம்ம தோழன் தான்... ஹீ ஹீ ஹீ...

Thursday, March 19, 2009

கல்வியின் மகத்துவம்.

வாய்த்ததொரு பழப்புளியை கைதனிலே எடுத்து
தேய்த்திடவே கழன்று விடும் பாத்திரத்தின் களிம்பு.
வாய்த்த நல்ல ஆசிரியர்கள் கல்வி எனும் புளியால்
தேய்த்து விட அறியாமை நீங்கி விடும் அறிவை விட்டு.
வாய்த்த இந்தப் பிறவியில் நம் அறியாமை தன்னை
மாய்த்து விடும் கல்வியதன் மகத்துவம் அளப்பரியது.

கல்வி என்றால் நூல்கள் தனை கவனமுடன் படித்து
நல்லபடி மனதிலே பதித்தல் என்று எண்ணும்
புல்லறிவாளர்களின் புகட்டல்களை மறந்து
கல்வியெனும் கருவியினால் நல்லறிவை நாம் காண்போம்.
இல்லாததொன்று இடித்தாலும் வாராது நம்முடன் இருந்துவரும்
நல்லதாம் அறிவதனைத் துலக்குவது கல்வியதே.

எல்லாமே செய்ய வைக்கும் பாதாளம் வரை பாயும்.
செல்வம் என்று சொல்லும் பணம் நிரந்தரம் இல்லைப் பார்
வெல்லுவோம் என்ற மன அகந்தையை வளர்த்து விடும்.
வல்லமை எனும் வீரம் ஒரு வயதிற்குத்தான் ஒளி வீசும்
சொல்லுகின்ற சொல் எதிலும் நல்ல பொருள் கூறும்
கல்வியாளன் மகத்துவம் காலத்தால் அழியாதது.

பெட்டிகளில் போட்டு வைத்துப் பல பூட்டுப் போட்டுப் பூட்டினாலும்
ஈட்டி வைத்த பொருட் செல்வம் கள்வர் பயம் சேர்ந்து நிற்கும்
போட்டி பொறாமை தரும் வீரமெனும் இறுமாப்பும்
வீட்டில் நிம்மதியை அழித்துவிடும் மனப்பயத்தால்
ஏட்டினிலே ஆணி கொண்டு எழுதி வைத்த கல்வியது
காட்டி நிற்கும் அழியாத நற்கருத்தே அதன் மகத்துவமாம்.

தேசம் விட்டுத் தேசம் சென்று தேகமதை வருத்தி
பாச உறவுகளை தூர விட்டுத் தேடி வைத்த
காசு பணங்கள் எல்லாம் எடுக்கெடுக்கக் குறைந்த போகும்
நேசமுடன் நம் உடலைத் தீனி போட்டுப் பெற்ற வீரம்
மோசமான நோய் வந்தால் போகுமிடம் தெரியாது
பேசப் பேசப் பொலிவு பெறும்அறிவூட்டும் கல்வியது
காசு வீரம் போலன்றி கடைசிவரை அழியாது
எடுக்க எடுக்கக் குறையாது, ஏற்றம் கூடி வரும்
இருக்கும் இடங்களெல்லாம் சிறப்பதனைப் பெற்றுத்தரும்
மிடுக்குடனே சபைதனிலே நிமிர்ந்து நிற்க வைத்துவிடும் கல்வி.

காதல் வதை

சிரிக்க நினைத்தால் - சிரிக்க
முடியாது
அழ நினைத்தால் - அழ
முடியாது
கதைக்க நினைத்தால்  - கதைக்க
முடியாது
சொல்ல நினைத்தால் - சொல்ல
முடியாது
பொறுக்க நினைத்தால் - பொறுக்க
முடியாது
மறக்க நினைத்தால் - மறக்க
முடியாது
கொடுக்க நினைத்தால் - கொடுக்க
முடியாது
படிக்க நினைத்தால் - படிக்க
முடியாது
சொல்ல நினைத்தால் - சொல்ல
முடியாது
ஆனால்...
எழுத நினைத்தேன் - எழுத
முடிகிறது... அது தான் 'காதல் கவிதை'.

Friday, March 13, 2009

மனிதா... எங்கே உன் தாய்மை???

உன் தாய்மையை ஒப்பிட்டுக் கொள்...!!!!!

Saturday, March 7, 2009

Budget Cuts

 

மரண அறிவித்தல்...

திரு. றோஸ் பாண் என்பவர் காலமாகி விட்டார்.
அன்னார் பணிஸ் என்பவரின் அன்புக் கணவரும்,
பக்கட் பணிஸ், கொம்பு பணிஸ், சீனி பணிஸ், கறி பணிஸ், கிறீம் பணிஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,  கல் பணிஸின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைககள் இன்று மாலை 4.30 ற்கு வெதுப்பகத்திலிருந்து வெள்ளவத்தையில் உள்ள றோயல் வெதுப்பகத்தில்  கண்ணாடிப் பெட்டிக்குள் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு, பின்னர் பொதுமக்களின் வாய்களுக்குள் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை காலை மாலை மதிய உணவு உண்பவர்கள் கவனத்தில் கொள்ளவும்.

தகவல்-
வெதுப்பக முதலாளி துவா.

தொலைந்த என்னுயிர்...

இதயம் என்னும் சுவரினில்,
நினைவு எனும் தூரிகையால்,
உதிரம் எனும் மை கொண்டு,
உன் உருவமதை வரைந்து அதற்கு,
உயிர் கொடுக்க ஆசைப்பட்டு,
என் உயிரையும் கொடுத்து விட்டேன்,
ஆனால் நீ இப்போது என்னையும் என் ஓவியத்தையும் வேண்டாமென்பது ஏனோ???

காதல் வலி

வலியது கொடியது.....
அதனிலும் கொடியது.......
காதலில் விழுவது.!!!!!